ஶ்ரீ தேவி உவாச :
ஶ்ருண்வந்து நிர்ஜரா ஸர்வே வ்யாஹரந்த்யா வசோ மம |
யஸ்ய ஶ்ரவணமாத்ரேண மத்ரூபத்வம் ப்ரபத்யதே ||
அஹமேவாஸ பூர்வம் மே நான்யத் கிஞ்சின்னகாதிப |
ததாத்மரூபம் சித்ஸம்வித் பரப்ரஹ்மைக நாமகம் ||
- தேவி கீதை, அத்தியாயம் இரண்டு, ஸ்லோகம் 1-2
தேவி கூறினாள் :
நான் சொல்வதை எல்லா தேவர்களும் கவனிக்கட்டும். என்னுடைய இந்த வார்த்தைகளைக் கேட்பதன் மூலம், ஒருவன் என்னுடைய பரப்ரஹ்ம ஸ்வரூபத்தை அடைகிறான்.
ஶ்ருஷ்டியின் ஆரம்பத்தில் நான் மட்டுமே இருந்தேன். வேறு எதுவும் இல்லை. எனது இந்த உண்மையான நிலை, சித் (தூய உணர்வு) என்றும், சம்வித் (உயர்ந்த ஞானம்) என்றும், பரபிரம்மன் (ஒரே உயர்ந்த பரமான சைதன்யம் / பரம்பொருள்/ கடவுள்) என்றும் அறியப்படுகிறது.